உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கொள்ளுப்பொடி.. சுவையான சூப்பர் ரெசிபி!

உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் கொள்ளுப் பொடி. இட்லி, சாதத்திற்கு ஏற்ற சுவையான சூப்பர் ரெசிபி!

இந்த அவசர உலகத்தில் காலை உணவு என்பது பலருக்கும் அரிதாக போய் விட்டது. அவசர அவசரமாக எழுந்து ஆபீஸ் போகணும் டென்ஷனாலே காலை உணவை மறந்து ஓடி கொண்டிருக்கின்றனர்.

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற வாக்கிற்கு மாறாக வேலை பளு மற்றும் பணத்திற்காக தனது உடல் நிலையை கவனிக்காமல் பலர் ஓடி கொண்டே தான் இருக்கின்றனர். தனது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் பயணிக்க முடியும் என்பதை பலரும் உணர மறுக்கின்றனர்.

ஆனால் காலை உணவு ஒவொருவருக்கும் எவ்வளவு அவசியம் என்கின்ற புரிதல் நிறைய பேர்க்கு இன்னும் புலம்பட வில்லை.

Also read: அம்மியில சட்னியும் அரைக்கணும், ஐபோன் பற்றியும் தெரியனும்.. நவயுக குடும்பத் தலைவிகளின் பாடு

அப்படி காலை உணவிற்கு ஏற்ற மிகவும் ஆரோக்கியமான, சுவையான கொள்ளு பொடி எப்படி செய்வது என்று பார்ப்போமா.

சிலருக்கு கொள்ளு என்றாலே குதிரை தான் ஞாபகம் வரும். ஆனால் இந்த கொள்ளு உடல் சூட்டையும், மாதவிடாய் பிரச்சினை களையும், வயிற்றுப் போக்கையும் சரி செய்யக் கூடிய அளவுக்கு அதிக சத்து நிறைந்த இந்த கொள்ளு பொடி எப்படி செய்வது என்று நாம் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கொள்ளு – 250 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
கடலை பருப்பு – 100 கிராம்
பொட்டுக்கடலை – 100 கிராம்
வர மிளகாய் – பத்து காரத்திற்கு ஏற்ப
பூண்டு பல் 10
பெருங்காயத்தூள் சிறிதளவு
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை :

ஒரு கடாயில் அனைத்து பொருட்களையும் தனித் தனியாக வறுத்து எடுக்க வேண்டும். வறுத் தெடுத்த பொருட்களை ஒரு தட்டில் போட்டு நன்றாக ஆற வைக்க வேண்டும். ஆற வைத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து நைஸாக அரைக்க வேண்டும். இப்போது சுவையான கொள்ளு பொடி தயார். இதை சூடான இட்லி, சாதம் இவை இரண்டுக்கும் நல்லெண்ணெய் கலந்து சாப்பிட வேண்டும்.

ஆரோக்கியமான இந்த கொள்ளு பொடியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

எந்த ரெசிபியை நீங்களும் உங்க வீட்டில் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதி விடுங்கள்.

Also read: மஷ்ரூம் மசாலாவை இப்படி செய்து பாருங்கள். அசைவம் சாப்பிடுவதை விட, இதன் சுவை கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கும்.