அழகு குறிப்பு

இயற்கை முறையில் பிங்க் நிற உதடுகளை பெறுவது எப்படி?

பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் அனைத்திலுமே கெமிக்கல் கலந்துள்ளன. ஆனாலும் பெண்கள் தன்னை அழகுப்படுத்தும் நோக்கத்தில் அதனின் விளைவுகளை பொருட்படுத்தாமல் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி உபயோகிக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையை பற்றி அவர்கள் யோசிப்பதில்லை.

எனவே இந்த கெமிக்கல் பொருட்களை தடுக்க நம் வீட்டிலேயே இயற்கை முறையில் லிப்ஸ்டிக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். முதலில் ஒரு மூன்று பீட்ரூட்டை எடுத்துக் கொண்டு அதனின் தோள்களை சீவி விட வேண்டும்.

அதன் பின்னர் அதனை சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, அதனை சீவி எடுத்துவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை ஒரு தனி பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வடிகட்டிய பீட்ரூட் சாரை தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி மூடி வைக்க வேண்டும். சில மணி நேரம் அந்த பீட்ரூட் தண்ணீரை மூடி வைத்துவிட்டு பின்னர் திறந்து பார்க்கும் பொழுது லிப்ஸ்டிக் தயாரான நிலையில் இருக்கும். அதை உபயோகிப்பதன் மூலம் நம் உதடுகள் நாளடைவில் கருமை நீங்கி சிகப்பு நிறமாக மாறக்கூடும்.

அதனை உபயோகித்தால் நம் உடலுக்கு எந்த ஒரு பின் விளைவும் வர நேரிடாது. ஆகவே கெமிக்கல் பொருட்களை பெண்கள் உபயோகிக்காமல் நம் வீட்டிலேயே இயற்கை முறையில் செய்யக்கூடிய பொருட்களை உபயோகித்து பயனடையலாம்.